'குடும்பஸ்தன்' பட இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் புதிய படம்!

3 months ago 11

சென்னை,

பிரபல நடிகர் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.18 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் ராஜேஷ்வரி காளிசாமி, "குடும்பஸ்தன் படம் வெற்றி பெறும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 10 வருடங்களுக்கு முன்பாக நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் தொடங்கிய போது எங்களுக்கு சினிமாவுக்கு வரவேண்டும் என்று ஆசை இருந்தது. இப்போதுதான் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. மேலும் எங்களிடம் அடுத்த புதிய படத்திற்கான கதை தயாராக உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article