குடும்ப தகராறு கொலையில் முடிந்தது மனைவியைக் கொன்று புதைத்த டிரைவர் கைது

3 months ago 18

ராமேஸ்வரம் : குடும்பத் தகராறில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்று புதைத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பின்புறம் ஏரகாடு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தர்மராஜ் (40). இவரது மனைவி தனலெட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, தர்மராஜ் சுத்தியலால் தனலெட்சுமி தலையில் அடித்தார். இதில் ரத்த காயத்துடன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

மேலும் கல்லால் தாக்கி தனலெட்சுமியை கொன்று வீட்டின் முன்பு மணல் பகுதியில் உடலை தோண்டி தர்மராஜ் புதைத்துள்ளார். தனலட்சுமியிடம் தர்மராஜ் தகராறு செய்ததை அறிந்த தனலட்சுமியின் அண்ணன் முனியாண்டி ராமேஸ்வரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். டிஎஸ்பி உமாதேவி தலைமையிலான போலீசார், தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். தர்மராஜ் அளித்த தகவலின் அடிப்படையில், வீட்டின் முன்பு புதைத்த தனலெட்சுமியின் உடலை போலீசார், தாசில்தார் செல்லப்பா, விஏஓ ரோட்ரிகோ முன்னிலையில் தோண்டி எடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post குடும்ப தகராறு கொலையில் முடிந்தது மனைவியைக் கொன்று புதைத்த டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article