குடியரசு தினவிழா பாதுகப்பு எதிரொலி திண்டுக்கல்,கொடைரோடு, பழநி ஜங்ஷன்களில் தீவிர சோதனை

2 weeks ago 3

திண்டுக்கல் : நாட்டின் 76வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே எஸ்ஐ அறிவுரையின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்ட குழு நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ரயில்களில் ஏற, இறங்க வந்த பயணிகளின் உடைமைகள், இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள், பார்சல் அலுவலகம், டிக்கெட் கவுண்டர்கள், நடைமேடைகள், நடைமேடைகள் பாலம், குட்செட், தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர்.மேலும் தேவையின்றி நடைமேடைகளில் யாரும் அமர கூடாது, தண்டவாளங்களில் நடமாட கூடாது, ரயில் நிலையத்தை சுற்றி வாகனங்கள் நிறுத்த கூடாது என எச்சரிக்கையும் விடுத்தனர்.

மேலும் ரயில் நிலைய வளாகத்திற்குள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் திரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.* இதேபோல் பழநி ரயில்நிலையத்தில் ரயில்வே எஸ்ஐ பொன்னுச்சாமி தலைமையிலும், கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்ஐ கேசவன் தலைமையிலும் போலீசார் நேற்று மேற்கூறிய அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

The post குடியரசு தினவிழா பாதுகப்பு எதிரொலி திண்டுக்கல்,கொடைரோடு, பழநி ஜங்ஷன்களில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article