குடியரசு தினத்தில் மதுபானம் விற்ற 4 பேர் கைது

1 day ago 1

பெரம்பூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனை பயன்படுத்தி ஓட்டேரி பகுதியில் சிலர், முன்னதாகவே டாஸ்மாக் கடைகளில் இருந்து அதிகளவில் மது பாட்டில்களை வாங்கி வைத்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ஓட்டேரி புதிய குளக்கரை சாலையில் மதுபாட்டில் விற்ற கொளத்தூரை சேர்ந்த விநாயகமூர்த்தி (49), அயனாவரம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த பிரசாந்த் (26) ஆகிய இருவரை மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

* வியாசர்பாடி உதயசூரியன் நகர் 5வது பிளாக் பகுதியில், குடியரசு தினத்தில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக எம்கேபி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு மது பாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (35), அவரது தம்பி சேவியர் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post குடியரசு தினத்தில் மதுபானம் விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article