புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது: 520 கிராம் பறிமுதல்

19 hours ago 1

திருப்பூர், ஜன.30: திருப்பூர், வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சுண்டமேடு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தனர். அங்கு 180 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  தொடர்ந்து மளிகைக்கடைக்காரர் கதிவரன் (30)என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 180 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதே போல் பழவஞ்சிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விக்னேஷ் (27) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 140 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே போல் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் புகையிலைப்பொருட்கள் விற்ற ஆதிகேசவன் (21) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது: 520 கிராம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article