குடியரசு தின விழா: பிரதமர் மோடி வாழ்த்து

2 weeks ago 1

புதுடெல்லி,

 76-ஆவது குடியரசு தின விழா இன்று (ஜன. 26) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

'ஒரு ஜனநாயக நாடாக 75 பொன்னான ஆண்டுகள் நாம் திகழுவதை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். நமது அரசமைப்பை உருவாக்கிய மேன்மைமிக்க அனைத்து மனிதர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறோம். ஜனநாயகத்திலும் ஒற்றுமையிலும் நமது பயணம் வேரூன்றி இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

நமது அரசமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இத்தருணம் பலப்படுத்துவதாக அமையட்டும். மேலும், செழிப்பானதொரு வலிமையான நாடாக இந்தியாவை கட்டமைக்கும் நமது முயற்சிகளுக்கும் இத்தருணம் பலத்தை தரட்டும். குடியரசு நாள் வாழ்த்துகள்!' என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy Republic Day.

Today, we celebrate 75 glorious years of being a Republic. We bow to all the great women and men who made our Constitution and ensured that our journey is rooted in democracy, dignity and unity. May this occasion strengthen our efforts towards preserving the…

— Narendra Modi (@narendramodi) January 26, 2025

Read Entire Article