அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

14 hours ago 2

கோவை,

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

* 1957- பவானி ஆற்றின் உபரி நீரை திருப்பி விடவேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள் மனு (CM - காமராஜர்)

* 1972-இத்திட்டத்திற்கு அத்த்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயரிடப்பட்டு திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. (CM - கலைஞர்)

* 2009-Technical expert committee அமைக்கப்பட்டு திட்ட வரையறை செய்யப்பட்டது. (CM -கலைஞர்)

* 2019-திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,634 கோடி செலவில் 34 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் போதிய நிதி ஒதுக்காமலும், நிலம் கையகப் படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டது. (CM - எடப்பாடி பழனிச்சாமி)

* 2021-2024

இத்திட்டத்திற்கு முழுமையாக தேவையான 1,960 கோடி நிதியையும் ஒதுக்கி, அத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளை களைந்து, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.(CM - மு.க.ஸ்டாலின்)

* 2025-நீர் மக்களுக்கு கிடைக்கப் பெற்றது. (CM மு.க.ஸ்டாலின்)

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


pic.twitter.com/X3UbJixUCh

— V.Senthilbalaji (@V_Senthilbalaji) February 9, 2025

முன்னதாக கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி அதன் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட போது, மத்திய அரசு அல்லது வங்கிகளிடம் இருந்து நிதி பெற்று செய்யலாம் என்றனர். அதனால், எப்போது பணி முடியும் என்பதை கூற முடியவில்லை. உரிய நேரத்தில் திட்டத்தை முடிக்க, நான் மாநில அரசின் நிதியில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டேன். பணிகளை வேகமாக முடிக்க ஒப்பந்தம் எல்.என்.டி-க்கு வழங்கப்பட்டது. பணி நடைபெற்ற போது கொரானோ பாதிப்பால் சற்று தொய்வு ஏற்பட்டது.

சுமார் 85 சதவீத பணிகள் முடிவடைந்து 15 சதவீத பணிகள் மீதம் இருந்தன. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிரமங்கள் காரணமாக இருந்தன. அவற்றை ஒரு வருடத்திற்குள் முடித்திருக்கலாம். அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டது. நான்கு வருடமாக தி.மு.க. அரசு காலம் தாழ்த்தி தற்போது இந்த திட்டத்தை திறந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

Read Entire Article