நடிகர் அஜித்தின் நகைச்சுவை உணர்வு குறித்து பகிர்ந்த நடிகை

3 months ago 14

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தள்ளிப்போய் கடந்த 6-ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும்நிலையில், 'சவதீகா' பாடலில் நடனமாடிய நடிகை சவுமியா பாரதி, அஜித் குறித்து சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"விடாமுயற்சி' படப்பிடிப்பின்போது ஒருநாள் அஜித் சார், 'கடவுளே' எனக் கூறியபடி களைப்பாக வந்து இருக்கையில் அமர்ந்துவிட்டு, என்னை பார்த்து காமெடியாக 'அ...தே' எனக் கூறி சிரித்தார். அவரின் நகைச்சுவை உணர்வு மிகவும் அற்புதமானது" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read Entire Article