குடிமங்கலத்தில் இன்று ரேக்ளா பந்தயம்

2 weeks ago 1

 

உடுமலை, ஜன.25: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி சார்பில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயம் இன்றும்,நாளையும் நடக்கிறது. இதற்கான கால்கோல் விழா நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். விழாவில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிக்கடவு கிரி, ஆனந்தராஜ், ஷியாம் பிரசாத், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயபால்,குடிமங்கலம் ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் புஷ்பராஜ், கோபால்,பாலசுப்பிரமணி,நித்தியானந்தம் .ரவி,முருகானந்தம், காளீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஈஸ்வரசாமி எம்பி, மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

The post குடிமங்கலத்தில் இன்று ரேக்ளா பந்தயம் appeared first on Dinakaran.

Read Entire Article