குடிபோதையில் தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

6 months ago 28

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியம் சூடிகோட்டா பகுதியை சேர்ந்தவர் பத்மினி (74). இவரது கணவர் பாலன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் பிரசாந்த் குடிப்பழக்கம் உள்ளவர். அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் பிரச்னை செய்வது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் காலை பிரசாந்த் அவரது தாய் பத்மினியிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி, கீழே கிடந்த செங்கலை எடுத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். தொடர்ந்து வீட்டு ஜன்னலில் உள்ள கண்ணாடிகளை செங்கலால் அடித்து உடைத்துள்ளார். உடனே சத்தம் கேட்டு இளைய மகன் பிரமோத் வெளியே வருவதற்குள் பிரசாந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இச்சம்பவம் குறித்து பத்மினி மாகே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் பிரசாந்த் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடிபோதையில் தாயை தாக்கிய மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article