சென்னை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: பல்லாவரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் குடித்ததில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீருடன் கழிவுநீர் கலந்ததும், அதனை தெரியாமல் குடித்த மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் குடிநீரை பாதுகாப்பாக விநியோகம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமானது. குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யவும் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள் appeared first on Dinakaran.