புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 1 சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக நடந்த பிளே ஆப் போட்டியில் நேற்று, டோகோ அணியை இந்தியா அபாரமாக வென்றது. தலைநகர் புதுடெல்லியில் டேவிஸ் கோப்பை பிளே ஆப் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான டோகோ அணி வீரர்களும் இந்திய வீரர்களும் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி – ரித்விக் சவுத்ரி போலிப்பள்ளி இணை, டோகோ நாட்டின் மலப்பா டிங்கோ அகோமோலோ- ஹோடபலோ பேடியோ இணையுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் ஆரம்பம் முதல் துடிப்புடன் ஆடியதால் டோகோ இணை ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. போட்டியின் இறுதியில் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை அபார வெற்றி பெற்றது. இதனால், 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா டேவிஸ் கோப்பை உலக குரூப் 1 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
The post டேவிஸ் கோப்பை பிளேஆப் சுற்றில் கெத்து காட்டிய இந்தியா: உலக குரூப் 1 சுற்றுக்கு தகுதி: டோகோ பரிதாப தோல்வி appeared first on Dinakaran.