குஜராத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: ராகுல்காந்தி அழைப்பு

2 days ago 3

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் காங்கிரஸ் தலைவர்களுடனான கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசுகையில், ‘நம்முடைய போராட்டம் வெறும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல; பாஜக – ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான கருத்தியல் போராட்டமாகும். பாஜகவை தோற்கடிக்க ஒரே கட்சி உள்ளது என்றால், அது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், குஜராத் வழியாகவே செல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி குஜராத்திலிருந்து தான் தொடங்கியது.

குஜராத் மக்கள் மிகச் சிறந்த தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் படேலை அளித்தீர்கள். ஆனால், இன்று குஜராத்தில் நம்முடைய செல்வாக்கு குறைந்துள்ளது. மாவட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்தபோது, நம்மிடையே உள்ள போட்டியானது ஆக்கப்பூர்வமாக இல்லாமல், அழிவை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர்கள் கூறினர். இரண்டாவதாக, உள்ளூர் மக்களுக்கு தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

மாவட்டத்தை அகமதாபாத்திலிருந்து இயக்கக் கூடாது; மாவட்டம் மாவட்டத்திலிருந்தே இயங்க வேண்டும். மாவட்டத் தலைவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும். மாவட்டத் தலைவருக்கு பொறுப்பும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணியை இப்போது இருந்தே தொடங்க வேண்டும்’ என்று கூறினர்.

The post குஜராத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்: ராகுல்காந்தி அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article