குஜராத்: 2 கார்கள் மோதல்; 5 பேர் பலி

5 hours ago 2

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் தோலெரா நகரில் சந்திதா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆமதாபாத்தில் இருந்து பவநகர் நோக்கி செல்லும் சாலையை இணைக்கும் பகுதியில் சென்றபோது, சொகுசு ரக கார் ஒன்று அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில், சொகுசு காரில் பயணித்த 3 சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர் ஒருவர் என 4 பேர் பலியானார்கள். மற்றொரு காரில் இருந்த பெண் ஒருவரும் பலியானார்.

இந்த சம்பவம் பற்றி ஆமதாபாத் போலீஸ் சூப்பிரெண்டு கூறும்போது, விபத்தில் 5 பேர் பலியானார்கள். பலத்த காயமடைந்த 3 பேர் பவநகரை அடிப்படையாக கொண்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

Read Entire Article