கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களிடையே ராகிங் என புகார்

3 weeks ago 3
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று இரவு சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததில் மூன்றாம் ஆண்டு மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5ஆம் ஆண்டு பயிலும் கவின், தியனேஷ் என்ற மாணவர்கள், ராகிங் செய்ய ஜூனியர் மாணவர்களை அழைத்து வரும் படி கூறியதை ஆலன் என்ற மாணவர் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பீர் பாட்டிலால் ஜூனியர் மாணவர் ஆலனை தாக்கி விடுதி முழுவதும் அடித்து இழுத்து சென்றதாகவும், வார்டன்வந்தவுடன் சீனியர் மாணவர்கள் தப்பிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article