திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று மாலை குடும்பத்தினருடன் நடிகர் சிவகார்த்திகேயன் வந்தார். ராமநாதபுரத்தில் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று மாலை திரும்பும் வழியில் கீழடிக்கு வந்தார். கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்து வியந்தார்.
அவருடன் அவர் மனைவி, மகள், மகன் ஆகியோரும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அவருக்கு கீழடி தொல்லியல் அலுவலர்கள் ரமேஷ், அஜய் ஆகியோர் தொல்பொருள்கள் கண்டுபிடிப்பு குறித்தும், அதன் காலங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். பின்னர் தான் வந்த வேனில் ஏறி புறப்பட்டு சென்றார்.
The post கீழடிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வருகை appeared first on Dinakaran.