கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் கேள்வி

4 weeks ago 6

டெல்லி: கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவையில் திமுக எம்.பி. ராணிஸ்ரீகுமார் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் தெரிவித்துள்ளார். 2015,2016-សំ நடைபெற்ற கீழடி முதல், 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை கடந்த ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களை கொண்டு | முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்கு பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

The post கீழடி 1,2-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியிட தாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article