தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்: மாற்றக்கூறி இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம்.

5 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை மாற்றக்கூறி இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியதாவது, இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேவுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டுமென்று இரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 2 தேர்வுக்கு 6000 க்கும் மேலானவர்கள் CBT 1 தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் இருந்து தகுதி பெற்றுள்ளார்கள்.

நீட் தேர்வு எதிர்வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் நிறைய தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்கு தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆகவே தேர்வு மையங்களை மாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு கேட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டார்.

The post தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்: மாற்றக்கூறி இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம். appeared first on Dinakaran.

Read Entire Article