கிறிஸ்துமஸ் பண்டிகை - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

6 months ago 24

சென்னை,

உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்ற்னர். அதன்படி, தற்போது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

pic.twitter.com/vaVtybEbhZ

— TVK Vijay (@tvkvijayhq) December 25, 2024
Read Entire Article