கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.14,281; சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.16,861

4 weeks ago 4

சென்னை: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, தொடர் விடுமுறைகள் வருவதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மற்றும் சுற்றுலா தலங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. அதோடு தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

மேலும் ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொண்டால் பயண நேரமே ஓரிரு நாட்களை எடுத்துக் கொள்ளும் என்பதால் பெரும்பாலான பயணிகள் விமானங்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விடுமுறை கால பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தென் மாவட்ட மக்கள் செல்லக்கூடிய தூத்துக்குடி, மதுரை மற்றும் திருவனந்தபுரம், கொச்சி விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதோடு சுற்றுலா தலங்களான மைசூர் மற்றும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன.இதுபோல் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக, விமான டிக்கெட் கட்டணங்களும் மூன்று மடங்கில் இருந்து நான்கு மடங்கு வரை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.

டிக்கெட் கட்டண விவரம் வருமாறு
வழக்கமான
கட்டணம் நேற்றைய
கட்டணம்
சென்னை-தூத்துக்குடி ரூ.4,796 ரூ.14,281
சென்னை-மதுரை ரூ.4,300 ரூ.17,695
சென்னை-திருச்சி ரூ.2,382 ரூ.14,387
சென்னை-கோவை ரூ.3,485 ரூ.9,418
சென்னை-சேலம் ரூ.3,537 ரூ.8,007
சென்னை-திருவனந்தபுரம் ரூ.3,821 ரூ.13,306
சென்னை-கொச்சி ரூ.3,678 ரூ.18,377
சென்னை-மைசூர் ரூ.3,432 ரூ.9,872
சென்னை-சிங்கப்பூர் ரூ.7,510 ரூ.16,861
சென்னை-கோலாலம்பூர் ரூ.11,016 ரூ.33,903
சென்னை-தாய்லாந்து ரூ.8,891 ரூ.17,437
சென்னை-துபாய் ரூ.12,871 ரூ.26,752
இதைப்போல், விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் கட்டணங்கள் அதிகரித்து இருந்தாலும், பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான டிக்கெட்டுகளை எடுத்து பயணித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனால் பல விமானங்களில் சீட் இல்லாமல் ஹவுஸ்புல் ஆகிவிட்டன.

The post கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.14,281; சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.16,861 appeared first on Dinakaran.

Read Entire Article