கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

4 months ago 16

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரோட்ஸ் தீவு அருகே கடற்பகுதியில், அகதிகள் பயணம் செய்த படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ரோந்து படகு நெருங்கி வருவதை அறிந்து தப்பிக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு படையினர் வந்து சேர்ந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் 8 பேர் நீரில் முழ்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Read Entire Article