தூய்மை பணியில் நேர்மை... 12 சவரன் தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

6 hours ago 1

சேலம்,

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் போது, பன்னிரெண்டரை சவரன் தங்க சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.

சங்கிலி கிடைத்ததும் அதனை எடுத்து கொண்டு சென்று தனது மேற்பார்வையாளரிடம் அதுபற்றி அவர் தெரிவித்தார். பின்னர், மாமன்ற உறுப்பினர் பிரதீப்பின் உதவியுடன், அந்த நகையை போலீசாரிடம் மணிவேல் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, நகையை தவற விட்டவரை தேடி கண்டுபிடித்து அவரிடம் அந்த நகை ஒப்படைக்கப்பட்டது. தூய்மை பணியாளரின் நேர்மையான செயலுக்கு நகையின் உரிமையாளர் நன்றி தெரிவித்ததோடு, காவல் துறையினர் உள்பட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Read Entire Article