கிராம சபை கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

2 weeks ago 1

 

ஜெயங்கொண்டம், ஜன.25: அரியலூர் மாவட்ட கலெக்டர், ஆண்டிமடமட் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பள்ளி கல்வி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் கிராமசபைக்கூட்டங்கள் நாளை நடைபெறுகிறது. கிராம சபை கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும். அதனை ஒரு விவாத பொருளாக தீர்மானத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் திருப்பதி நேரில் சந்தித்து மனுவின் நகல் வழங்கப்பட்டு கிராம சபை கூட்டத்தில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் திருப்பதி கூறுகையில், கடந்த காலங்கள் போல் இல்லாமல் இனிவரும் காலங்களில் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் கல்வி சார்ந்த தேவைகளையும் பள்ளி சார்ந்த தேவைகளையும் முதன்மையான கூட்டப் பொருளாக முன்வைக்க வேண்டும்.

கிராம சபை கூட்டங்களில் கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி வளர்ச்சி குறித்து விவாத பொருளாக இடம்பெற வேண்டும். இது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமையாகும். இதுகுறித்து அனைத்து ஒரு நபர் ஒரு பள்ளி செயல் பாட்டாளர்களும் கிராம நகராட்சி செயலாளர்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்து வருகின்றனர் என்றார்.

The post கிராம சபை கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article