கிரண் அப்பாவரம் நடிக்கும் "கே-ராம்ப்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

4 hours ago 2

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'கா' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தில்ருபா திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அவரது 11-வது திரைப்படமான 'கே-ராம்ப்' என்ற திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதில் அவர் லுங்கி அணிந்த படி நிற்கும் அவருக்கு பின் மது பாட்டில்களால் ஆன ஹார்ட் சின்னம் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை ஹாச்யா மூவீஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை ஜெயின்ஸ் நானி இயக்குகிறார் .யுக்தி தரேஜா கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகிறது.

இந்நிலையில் 'கே-ராம்ப்' திரைப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Heavy Entertainment on OCT 18th #KRamp #HasyaMovies #Ruudranscelluloid pic.twitter.com/dM0Itl85Il

— Kiran Abbavaram (@Kiran_Abbavaram) July 14, 2025
Read Entire Article