நித்யாமேனன் மீது கோபப்பட்ட விஜய் சேதுபதியின் மனைவி

4 hours ago 2

சென்னை,

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.சமீபத்தில் இந்த படத்திலிருந்து 'பொட்டல முட்டாயே' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'தலைவன் தலைவி' படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னையில் நடந்த பட விழாவில் விஜய் சேதுபதி பங்கேற்று பேசும்போது, "இந்த படம் தொடங்கும்போதே எனக்கும், இயக்குனருக்கும் லேசான முட்டல்-மோதல் இருந்தது உண்மை தான். ஆனால் எல்லாம் சரியானது. நல்ல உறவில் சின்ன சின்ன சண்டைகளும் அழகுதானே. இந்த படத்தில் விஜய் சேதுபதியும், நித்யாமேனனும் கணவன்-மனைவியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன். அந்தளவு எதார்த்தமான, அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மனைவியே கோபப்படும் அளவுக்கு, இருவரும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்கள் என்றால் பாருங்களேன்" என்று குறிப்பிட்டார்.

டைரக்டர் பாண்டிராஜ் பேசும்போது, "எனக்கும், விஜய் சேதுபதிக்கும் சண்டை என்று பெரிதுபடுத்திட வேண்டாம். இந்த கதை விஜய் சேதுபதிக்காகவே படைத்தது. அது நல்லபடியாகவே நடந்தது. ஊடலும், கூடலும் சினிமாவில் சகஜம் தான். இப்போது எங்களுக்குள் நல்ல நட்பு நீடிக்கிறது" என்றார்.

Read Entire Article