"கிங்ஸ்டன்" படத்தின் டைட்டில் பாடல் அப்டேட்

3 hours ago 1

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம்.

இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளனர். இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் பேய் படமாகும். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர், டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 'ராசா ராசா' எனும் பாடலையும் 'மண்ட பத்திரம்' எனும் பாடலையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#Kingston title track today ❤️ pic.twitter.com/jLdQl9TViW

— G.V.Prakash Kumar (@gvprakash) March 1, 2025
Read Entire Article