
ஐதராபாத்,
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியன் 2' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அதனைத்தொடர்ந்து 'சந்து சாம்பியன்', ரவி தேஜா நடிப்பில் வெளியான 'மிஸ்டர் பச்சான்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவுடம் கிங்டம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இவர் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் கிளிப்ம்ஸ் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு 'ஆந்திரா கிங் தாலுகா' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார். விவேக்-மெர்வின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மிதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.