காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

4 hours ago 1

சென்னை, 

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலுக்குமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளிள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல், இது கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article