பும்ரா, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்

3 hours ago 2

புதுடெல்லி,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் 'விஸ்டன்' புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்படி 2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

31 வயதான பும்ரா கடந்த ஆண்டில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

28 வயதான மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டியிலும் சேர்த்து 1,659 ரன்கள் சேர்த்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும் .

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Read Entire Article