காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணம் ரத்து; அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

4 hours ago 1

புதுடெல்லி,

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி செவ்வாய்கிழமை (நேற்று) காலையில் சவுதி அரேபியாவில் சென்று இறங்கினார். முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் சென்றபோது, அந்நாட்டின் போர் விமானங்கள் கான்வாயாக மாறின.பிரதமர் மோடி பயணித்த விமானத்தின் முன் மற்றும் பின் பகுதியில் வட்டமிட்டபடி சவுதி அரேபிய விமானங்கள் பாதுகாப்பு மரியாதை செலுத்தின.

பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். அங்கு சென்ற அவருக்கு குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை பிரதமர் மோடியும் ஏற்று கொண்டார்.

இந்தநிலையில், 2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும், இன்று இரவே நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து நாளை காலை இந்தியா வந்திறங்குகிறார். தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான் மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பஹல்கா்ம் சம்பவம் குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது கண்டத்தை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி உடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஸ்ரீநகர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் மத நல்லினக்கத்தை குலைக்கும் வகையிலான பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Entire Article