காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டெல்லி திரும்பினர்

2 weeks ago 3

புதுடெல்லி,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியை நேற்று முன்தினம் இவர்கள் சுற்றி பார்த்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலையடுத்து, பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து டெல்லி திரும்பியவர்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 35 பேரும் இன்று இரவு சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Read Entire Article