காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கடந்த சம்பா பருவத்தில் என்எல்ஆர்-3449, பிகேம் -13,14,15, டிபிஎஸ்-5, ஏடிடி-54, 37, உள்ளிட்ட நெல் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நடவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது நடவு வயலின் வரப்பு ஓரங்களில் பல்வேறு விவசாயிகள் ஊடுபயிராக துவரை மற்றும் உளுந்து உள்ளிட்ட பயிர்களை, ஊடுபயிராக நடவு செய்தனர்.
இந்நிலையில் சம்பா பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்துள்ள நெல் மணிகளில் ஈரப்பதம் காணப்படுவதால், கூலி தொழிலாளர்கள் உதவியுடன் உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால், அறுவடை செய்த விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் சம்பா பருவத்தில் நடவு செய்த விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வரும்போது, மழையின் காரணமாக சேதம் ஏற்படுவதால் நெல் விலை போகுமா? போகாதா என்ற கவலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இதன்காரணமாக சம்பா பருவத்தை நிறைவு செய்த விவசாயிகள் நவரைப் பருவத்திற்கு ஆயத்தம் செய்வதில் ஆர்வம் குறைத்து வருகின்றனர்.
The post காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் appeared first on Dinakaran.