முத்துப்பேட்டை, மே 23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளிலும் கடந்த 4 வருடங்களில், கலைஞரின் கனவு இல்ல வீடுகளை கட்டி கொடுக்காமல், ெவறும் 10 வீடுகள் மட்டுமே கட்டி பாமர மக்களை கனவு காண வைக்கும் ஒன்றிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
ஒன்றிய பொருளாளர் விடுதலைப் பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் அன்பை முருகேஷ், மாரிமுத்து, செந்தில், அமுதா அரசப்பன், நிர்வாகிகள் ராஜ்குமார் பரமசிவம் செல்லதுரை, சரவணன், தண்டபாணி, தங்க பூமிநாதன், தனபால் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.முடிவில் நகரச் செயலாளர் குணா கண்ணதாசன் நன்றி கூறினார்.
The post முத்துப்பேட்டையில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.