புதுடெல்லி: காவிரி-வைகை- குண்டலாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக கர்நாடகா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன், “ காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடகா அரசுக்கு எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அம்மாநில அரசுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு விவகாரத்தில் கர்நாடகா பொய்யான தகவலை தருகிறது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.