காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர் பயிற்சியின் போது உயிரிழப்பு ..

2 months ago 10
சென்னையை அடுத்த ஆவடியில், சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தவர், உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பயிற்சி எடுத்தபோது மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். 1997 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்ற பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையிலிருந்த பிரபாகர் என்பவர் அண்மையில் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். இதற்கான பயிற்சியின்போது எஸ்.ஐ பிரபாகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read Entire Article