காவலர்கள் தாக்கியதால்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தனர்; முன்னாள் விசாரணை அதிகாரி பரபரப்பு சாட்சியம்

3 months ago 19

மதுரை: தமிழ்நாட்டையே உழுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் நிலையத்திற்குள் காவலர்கள் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்ததாக முன்னாள் விசாரணை அதிகாரி டிஎஸ்பி அனில்குமார் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சத்தான் குளத்தை சார்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி இரவு அரங்கேரிய இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய காவல் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கி சிபிஐக்கு மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் மீது முதற்கட்டமாக 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 104 பேரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி அனில்குமார் 51-வது நபராக சாட்சியம் அளித்தார்.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் தான் என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பு விசாரணை அதிகாரியான விஜயகுமார் சின்ஹா இந்த மாதம் 16-ம் தேதி சாட்சியம் அளிக்கவுள்ளார். இவரிடம் குற்றசாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை நடத்தவுள்ளனர். இந்த குறுக்கு விசாரணை முடிய 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதன்பின்னர் 4-மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

The post காவலர்கள் தாக்கியதால்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தனர்; முன்னாள் விசாரணை அதிகாரி பரபரப்பு சாட்சியம் appeared first on Dinakaran.

Read Entire Article