காவலர்களின் வார விடுமுறை அரசாணை அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்: ஐகோர்ட்

2 weeks ago 3

தமிழகத்தில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளதால் காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காவலர்களுக்கு முறையாக விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக காவலர்கள் பொதுமக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் உருவாகி வருகிறது.

Read Entire Article