காளி வெங்கட் நடிக்கும் "மெட்ராஸ் மேட்னி" பர்ஸ்ட் லுக் வெளியானது

6 days ago 6

சென்னை,

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அஷ்வத் மாரிமுத்து அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு இளைஞன் பணியன் அணிந்துக் கொண்டு வீட்டு வாசலில் நிற்கிறான். அவன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கோவிலில் நாய் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, இசை கே சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy to reveal the First look of @DreamWarriorpic presents, #MadrasMatinee A @MadrasMotionPic Production ‼️Written & directed by - @keyanmkAll the very best to whole team @kaaliactor @Roshni_offl @Vishva_actor @gk_anand @KCBalasarangan @jacki_artpic.twitter.com/l7lAKxyzdU

— karthik subbaraj (@karthiksubbaraj) April 4, 2025
Read Entire Article