
சென்னை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது முழுநேர நடிகராகி விட்டார். இவர் தற்போது தன் கைவசத்தில் 'ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன்' ஆகிய படங்களை வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து தனது 26-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதில் விஜய் ஆண்டனியில் 26-வது படத்திற்கு 'லாயர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவை நடிகர் விஜய் ஆண்டணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.