கால்களுக்கு இடையே வாலை நுழைத்து செல்லும் ஒரு நாயை போன்று ஓடிய பாகிஸ்தான்... அமெரிக்க முன்னாள் அதிகாரி

4 hours ago 3

வாஷிங்டன்,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ந்தேதி சுற்றுலாவாசிகளை இலக்காக கொண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 6-ந்தேதி, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகள் இலக்காக கொள்ளப்பட்டனர். இந்திய ஆயுத படைகளின் தாக்குதலில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அவற்றை இந்தியா முறியடித்து அதில் வெற்றியும் பெற்றது.

இந்நிலையில், பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து உள்ளார். அமெரிக்க என்டர்பிரைஸ் மையத்தின் மூத்த உறுப்பினராகவும் உள்ள அவர் நிருபர்களிடம் பேசும்போது, தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது.

தூதரக அளவில் என நான் கூற காரணம் என்னவென்றால், பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு பற்றியே அனைவரின் கவனமும் தற்போது உள்ளது. ராணுவ அளவில் என்றால், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத உட்கட்மைப்புகளை துல்லியமுடன் இலக்காக கொண்டு இந்தியா தாக்கியது.

அந்நாடு படுதோல்வியை சந்தித்தது என்ற முழு உண்மையை பாகிஸ்தான் ராணுவம் மறைக்க முடியாது. இந்தியா, வான்வழி தாக்குதலை நடத்தியதும், இரு கால்களுக்கு இடையே வாலை நுழைத்து கொண்டு செல்லும் பயந்து போன ஒரு நாயை போன்று, போர் நிறுத்தம் வேண்டும் என கோரி பாகிஸ்தான் ஓடியது என அவர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, சீருடையில் இருந்த பாகிஸ்தானிய அதிகாரிகள், பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் கலந்து கொண்டது என்பது, ஒரு பயங்கரவாதிக்கும், ஐ.எஸ்.ஐ. உறுப்பினர் ஒருவருக்கும் அல்லது பாகிஸ்தானிய ஆயுத படைக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

Read Entire Article