காலிமனைகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

6 months ago 28

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊத்தங்கரை தாலுகா, வாத்தியனூர் மற்றும் பர்கூர் தாலுகா அச்சமங்கலம் மற்றும் கொண்டப்பநாயனப்பள்ளி கிராமங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. இதில், ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் 14 காலி தொழில்மனைகள், பர்கூர் தொழிற்பேட்டையில் 11 காலி தொழில்மனைகள் உள்ளன. புதிதாக தொழில் தொடங்குவோர், தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் இணையதளம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட காலி தொழில்மனைகளை பார்வையிட, வள்ளியம்மை, கிளை மேலாளர், சிட்கோ கிளை அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post காலிமனைகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article