கார்த்தியின் "வா வாத்தியார்" பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

3 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'வா வாத்தியார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வா வாத்தியார்' படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்'  திரைப்படத்தின் முதல் பாடலான 'உயிர் பத்திக்காம' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Groove to the swing of coolest love song! First Single #UyirPathikaama from @Karthi_Offl's #VaaVaathiyaar releasing tomorrow A #NalanKumarasamy Entertainer A @Music_Santhosh Musical @VaaVaathiyaar #StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran #Sathyarajpic.twitter.com/wklW4IEw7u

— Studio Green (@StudioGreen2) February 13, 2025
Read Entire Article