![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39350774-nirmala.webp)
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு நிதி மந்திரி பதிலளித்து வருகிறார். அந்த வகையில் நேற்று மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது, 'மத்திய பட்ஜெட்டில், பா.ஜனதா ஆளாத மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன திமுக எம்.பிக்கள் என, குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது;-
மத்திய பட்ஜெட்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பா.ஜனதா ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை. புறக்கணித்ததாக கூறுவது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் மறுக்கிறேன். பட்ஜெட் தயாரிப்பின் போது, அனைத்து மாநிலங்களின் கருத்தும் கேட்டறியப்பட்டது. இந்த பட்ஜெட், பீகார் மாநிலத்திற்கு மட்டுமான பட்ஜெட் இல்லை. எல்லா மாநிலங்களுக்குமான பட்ஜெட். பஞ்சாப், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் பல உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது" என்றார்.