![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39350193-6.webp)
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ' முதல்முதலாக பாடல் எழுதும் போது, நீ நன்றாகத்தான் எழுதுகிறாய், நீயே எழுது என்று சிம்பு கூறினார். அவர் கொடுத்த ஐடியாவுக்குப் பிறகுதான் எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் என பாஸிடிவ் ஆக தொடங்கியது' என கூறியுள்ளார்.