கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள்

1 month ago 4

 

திருப்பூர், டிச.11: திருகார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 13ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் கோவில்களிலும், வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட வருகின்ற 12ம் தேதி கூடுதலாக 20 சிறப்பு பேருந்துகளும், 13ம் தேதி 40 சிறப்பு பேருந்துகளும் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் appeared first on Dinakaran.

Read Entire Article