
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கார் சென்றது. அந்த காரில் பள்ளிக்குழந்தைகள் 7 பேர் பயணித்தனர்.
நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி வேகமாக கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் கார் டிரைவர் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒரு பள்ளிக்குழந்தை படுகாயமடைந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த பள்ளிக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். உயிரிழந்த 7 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.