கார் கவிழ்ந்த விபத்தில் பெண் சாவு

3 months ago 14

தென்கனரா: தென்கனரா மாவட்டம், பண்ட்வால் தாலுகா பி.சி. ரோடு-பெல்தங்கடி நெடுஞ்சாலையில் பாம்பிலா என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை மட்டத்தில் இருந்து 6 அடிக்கு கீழே இருந்த தோட்டத்தில் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஓட்டுநர் பலத்த காயம் அடைந்து மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், கொடியல்பைல் பகுதியைச் சேர்ந்த பாகீரதி (58).

தும்கூரை சேர்ந்த பாகீரதியின் மருமகன் ரூபேஷ் தசரா விடுமுறையை கொண்டாட தனது மனைவி சுசித்ராவுடன், மங்களூருவில் உள்ள மாமியார் பாகீரதி வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் மூன்று பேரும், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் புஞ்சலகட்டேயிலிருந்து காரில் சென்றபோது பம்பிலாவில் உள்ள மசூதிக்கு அருகில் உள்ள வளைவில் விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. கொடியல்பைலைச் சேர்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர் கோபாலாவின் சகோதரி பாகீரதி என்பவர் பலியானது தெரியவந்தது.

The post கார் கவிழ்ந்த விபத்தில் பெண் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article