காரைக்குடி, பிப். 8: காரைக்குடி இசை நாடக சங்கத்தில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 102ம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சங்கத்தின் செயலாளர் சுகுமாறன் வரவேற்றார். பொருளாளர் மாணிக்கம், துணைத்தலைவர் சதாசிவம், துணைச்செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் கொத்தமங்கலம் பழ.காந்தி தலைமை வகித்தார். திரைப்பட தயாரிப்பாளர் கே.ஏ.சாய்சிதம்பரம் புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்று வைத்தார். நாடக ஆய்வாளர் பார்த்திபராஜா, முதுகலை தமிழாசிரியர் சாதே.ஸ்டெல்லாராணி, முன்னாள் துணைத்தலைவர் கண்ணன், முன்னாள் துணைச்செயலாளர் கணபதி, செயற்குழு உறுப்பினர்கள் ராதச்சந்திரன், வேலாயுதம், நாகேந்திரன், ராமநாச்சியப்பன், அருளானந்தம், சக்திமுருகன், சக்திவேல், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் ராமநாதன், சண்முகசுந்தரம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மனப்பாறை, மன்னார்குடி, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நடிகர்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post காரைக்குடியில் இசை நாடக சங்க விழா appeared first on Dinakaran.