ஆறுமுகநேரி, மே 23: காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் முகமது ஹசன் தலைமை வகித்து துவக்க உரை ஆற்றினார். துணை தலைவர் செய்யது அப்துல்காதர், தாளாளர் முகமது சம்சுதீன், முதல்வர் ரத்தினசாமி, தலைமை ஆசிரியர்கள் ஹாஜா மைதீன், சுரோமணி ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினர். இதில் 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. 100% தேர்ச்சி பெற பாடுபட்ட ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். மேலும் கோடை கால சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பெற்றோர், பள்ளியின் சிறப்பு குறித்து பேசினர். ஏற்பாடுகளை துணைத் தலைவர் முகமது லெப்பை செய்திருந்தார்.
The post காயல்பட்டினம் முகைதீன் பள்ளியில் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.