கராச்சி: நேற்று தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி மீண்டும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்யும்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமானுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அப்போது ஃபகர் ஜமானும் சிறிது நேரம் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் பாகிஸ்தான் அணிக்காக பேட்டிங் செய்ய வந்தபோது மீண்டும் களத்திற்கு வந்தார். இருப்பினும் காயம் காரணமாக அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. காயத்தின் தீவிரம் அதிகமாக உள்ளதால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபகார் ஜமான் வெளியேறியதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் அணியும் வெளியேற்றப்படும் அச்சுறுத்தல் இன்னும் தீவிரமாகியுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது முதல் போட்டியில் தோற்று, பிப்ரவரி 23 அன்று இந்தியாவிடம் தோற்றால், சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி.
The post காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் appeared first on Dinakaran.